script src='http://bloganolutilities.googlepages.com/blogger_comment_photos.js' type='text/javascript'/> ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க‌

blog.willhiggins.net: Home Rainwater Collection Calculator

blog.willhiggins.net: Home Rainwater Collection Calculator

துபையில் கஞ்சித்தொட்டி திறப்பு

துபையில் கஞ்சித்தொட்டி திறப்பு
கடந்த ஒருமாத காலமாக அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தொடர்பாக துபையில் வேலையிழப்பு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. வேலை இழப்பு என்பது எல்லா நிலையிலும் உள்ளது. அனைத்து துறையிலும் தொழிலாலர்/அலுவலக பணியாளர்கள் /மேலாலர்கள் அனைவரும் வேலை இழந்து வருகிறார்கள்.

இவ‌ர்க‌ளுக்கு நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்கும் வித‌மாக‌ துபையில் உள்ள‌ ஒரு ஐந்து ந‌ட்சத்திர‌ விடுதி ஒன்று (Arabian Park hotel) வேலை நீக்க‌ க‌டித‌த்துட‌ன் செல்ப‌வ‌‌ர்க‌ளுக்கு டிச‌ம்பர்15 முத‌ல் ஜ‌ன‌வ‌ரி 15 வ‌ரை ஒருமுறை இர‌வு உண‌வு வ‌ழ‌ங்குவ‌தாக‌ அறிவித்து உள்ள‌து. இந்த‌ ஒருவேளை இர‌வு உண‌வு ஒருமாத‌ கால‌த்தில் ஒருவ‌ருக்கு ஒரே ஒரு முறை ம‌ட்டும்தான் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என்ப‌து க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ செய்தி, நாள்தோறும் எல்லோருக்கும் கொடுத்தால் இப்போது பொருதாளதரம் இருக்கும் நிலையில் விடுதி உரிமையாள‌ர்க‌ளுக்கே க‌ஞ்சித்தொட்டி தேவையிருக்கும்.

வ‌ங்கிக‌ளையும், வேலை இழந்த‌‌வ‌ர்க‌ளையும் எதிர் நோக்கியிருக்கும் அடுத்த‌ பிர‌ச்ச‌னை த‌னிப‌ர் க‌ட‌ன் ம‌ற்றும் த‌னிப‌ர் காருக்குகான‌ க‌ட‌ன்க‌ளும்தான். இதை எப்ப‌டி வ‌ங்கிக‌ள் அணுக‌ப்போகின்ற‌ன‌ என‌ப‌து தெளிவாக‌த் தெரிய‌வில்லை.

சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் (200 பில்லிய‌ன் அமிர‌க‌ திர்க‌ம்க‌ள்) கடந்த‌‌ 2 மாத‌ கால‌ அள‌வில் வங்கி இருப்புப் ப‌ண‌ம் முத‌லீட்ட‌ர்க‌ளால் திரும்ப‌ பெற‌ப்ப‌ட்டுள்ள‌து. வங்கிகள் கடன் மற்றும் கடன் அட்டை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளனர். வங்கிக் கடன், கடன் அட்டை என்பது இப்போது துபையில் ஒட்டகக் கொம்பாகி விட்டது.

இங்குள்ள ம‌ஷ்ர‌க் வ‌ங்கியிள் வ‌ட்டியில்லாத‌ இருப்புப்ப‌த்திர‌ம் வாங்கியிருந்தால் மாதாந்திர‌‌ குலுக்கலில் ஒருவ‌ருக்கு ப‌ரிசாக ஒரு மில்லிய‌ன் திர்க‌ம்கள் (ரூபாய் 1 கோடியே 13 லட்சம்) கொடுத்து வ‌ருகிறார்க‌ள். ஆனால் பொருதாளதர வீழ்ச்சி தொட‌ங்கிய‌பின் ம‌க்க‌ள் த‌வ‌றான‌ வதந்திக‌ளாள் "பெரும‌ள‌வு" முத‌லீட்டுப்ப‌ண‌த்தை இவ்வங்கியில் உள்ள mashreq-millionair certificate-களை திரும்ப‌ பெற்றுவ‌ருகின்ற‌ன‌ர். இவ்வ‌ள‌வுக்கும் "ம‌ஷ்ர‌க்" வ‌ங்கியின் உரிமையாள‌ர் உல‌க‌ப்ப‌ண‌க்காரர்க‌ளின் பட்டியளில் வ‌ருபவர். துபையில் உள்ள‌ பெரும் பண‌க்கார‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர்கூட‌.

திட்ட‌மிட‌ப்ப‌ட்ட 90% (2500 tower buildings) புதிய‌ க‌ட்டிட‌ வ‌டிவ‌ம‌ப்பு ப‌ணிக‌ள் நிறுத்திவைக்கப்ப‌ட்டுள்ள‌ன. சுமார் 10% முத‌ல் 25% க‌ட்டுமாண‌ ப‌ணி முடிந்த‌ கட்டிடங்களின் பணிகள் நிறுத்தப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து‌.

புருனை நாட்டு ம‌ன்ன‌ரால் துபை "சத்வா" வில் க‌ட்ட‌ப்ப‌ட‌விருந்த‌ குறு நகர க‌ட்டிட‌ வ‌டிவ‌மமைப்பு ப‌ணிக‌ள் கால‌வ‌ரையின்றி ஒத்திவைக்கப‌ட்டுள்ள‌ன‌.

நடந்து கொண்டிருந்த கட்டிடப்பணிகளே நிறுத்தப்படும்போது புதிய‌ க‌ட்டிட‌ திட்ட‌மிடப்பணிகளின் நிலை எவ்வாறு இருக்கப்போகிறது என்று நினைத்துப் பார்க்கவே இயலாது. இங்குள்ள‌ ப‌ல‌ க‌ட்டுமான‌ ஒப்பந்த‌ நிறுவங்களின்‌ ஊழியர்கள் / தொழிலாலர்க‌ளின் எண்ணிக்கை மட்டும் 10 அயிர‌த்துக்கு மேல். சில நிறுவனங்களில் 30 ஆயிரம் வரை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழக்கௌம் நிலை உருவாகலாம்.

உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் தீவான பாம் ஜுமைரா (Palm Jumeirah)வின் property developerரான‌
NAKHEEL" சுமார் 90% புதிய‌ கட்டிட‌ வ‌டிவ‌மைப்பு ப‌ணிக‌ளையும், த‌னது புதிய‌ தீவு உருவாக்கப் பணிகளையும் ஒத்திவைத்துள்ள‌து. Jebel ali Palm island மற்றும் Deira palm islanட் தீவுகளின் ஆக்க‌ப்ப‌ணிக‌ள் முடிவடைந்த நிலையில் அத‌ற்கான‌ அடிப்ப‌டை வசதி க‌ட்டுமான‌ ப‌ணிக‌ள் த‌ற்காலிகமாக‌ நிறுத்தியுள்ள‌து. இதுவரைNAKHEEL" த‌ன‌து ஊழிய‌ர்க‌ள் 25% குறைத்துள்ள‌ன‌ர்.

துபையின் முன்ன‌ணி property developer க‌ளான‌
Emaar, dubai properties போன்ற நிறுவனங்கள் ந‌ட‌ப்புப்ப‌ணிகளையும் எதிர்வர‌விருந்த புதிய திட்ட‌ங்களையும் பெரும‌ள‌வு முட‌க்கி வைத்துள்ளது.
Emaar இப்போது கட்டப்பட்டுகொண்டிருக்கும்உல‌கின் மிக உயர்ந்த‌‌ கோபுர‌க்க‌ட்டிட‌த்தின்(world tallest tower) உரிமை நிறுவன‌ம் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
dubai properties டிச‌ம்ப‌ர் முத‌ல் வார‌த்தில் த‌ன‌து ஊழிய‌ர்கள் ஒரே நாளில் 200 லிருந்து 60 ஆக‌க்குறைத்து விட்ட‌து.

துபையின் பொருளாதரத்தின் "முதுகெலும்பு" க‌ட்டிட‌ க‌ட்டுமாண‌ப்ப‌ணிக‌ள்தான்.
இன்னும் ஆறு மாத்திற்குமேலும் இதே நிலை தொடர்ந்தால் "க‌ட்டுமாண‌த்துறையில்" ப‌ணிபுரிவோர் 50% பேர் ப‌ணியிழ‌க்க‌ வேண்டியிருக்கும். தேனீர்கடைகள், ப‌ள்ளிக‌ள் முத‌ல் பேர‌ங்காடிக‌ள் வ‌ரை இத‌ன் இழ‌ப்பை எதிர் நோக்க‌வேண்டியிருக்கும். இப்பொருளாதார தேக்கம் துபை, ஷார்ஜா மற்றும் அஜ்மான் அமிரகங்களில் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

துபையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலனவர்கள் குடியிருப்பது ஷார்ஜா மற்றும் அஜ்மான் அமிரகங்களில்தான். முன்பு நான் குடியிருக்கும் அஜ்மானில் உள்ள‌ கட்டிட‌த்திற்கு நாள்தோறும் 2௩-3 பேராவது வாடகைக்கு வீடு கேட்டு வருவார்கள். கடந்த ஒரு மாதமாக‌ ஒருவர்கூட வரவில்லை.

நவம்பர் இரண்டாவது வாரத்தில் துபையில் இப்பொருளாதார இத்தேக்க நிலை வெளியில் தெரியத் தொடங்கியது. வேலை இழப்பு எனும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள்/பாதிக்கப்பட இருப்பவர்களின் எண்ணிக்கை 30 நாட்களுக்குள் ஒரு லட்சமாக உயரகூடும். ஆனால் இதுபற்றிய முழுமையான தகவல்களை இங்குள்ள சட்ட கட்டுப்பாடுகள் காரணமாக‌ ஆதார‌ங்களுடன் திரட்ட இயலாது.

துபை என்பது ஒருகாலத்தில் (நவம்பர் 15 தேதிக்கு முன்) வேலை தேடி வருபவர்களின் "சொர்க்கபுரி", ஆனால் இன்று புதிதாக வேலை தேடி வருபவர்களில் 1000 த்தில் ஒருவருக்கு கூட வேலை கிடைக்காது என்பதுதான் உண்மையான நிலை. இந்த தேக்க நிலை சரியாக 6 மாதமோ ஒரு வருடமோ ஆகலாம். அதனால் துபையில் யாரேனும் வேலை வாங்கித்தருகிறேன் என்று உறுதியளித்தால் நம்பி யாரும் ஏமாந்து விடவேண்டாம்.

துபைக்கு இப்ப‌டி ஒரு நிலைமை வ‌ரும் என்று 2 மாத‌ங்க‌ள் யாராவ‌து சொல்லியிருன்தால் அவர்க‌ளுக்கு பைத்தியாக்கார‌ன் ப‌ட்ட‌ம் க‌ட்டி நாடுகட‌த்தியிருப்பார்க‌ள்

இப்பொருளாதார தேக்க‌த்தை துபை அமிர‌க‌ அர‌சு எப்ப‌டிக் கையாள‌கப் போகிற‌து என்ப‌து இதுவ‌ரை ஒரு கேள்விக்குறியாக‌வே உள்ள‌து. இது பொருளாதார வீழ்ச்சி அல்ல, தேக்க நிலை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இப்பதிவை படிக்கும் உங்க‌ள் ம‌ன‌தில் "உனக்கும் வேலை இருக்குமா போகுமான்னு" என்ற ஒரு கேள்வி எழும். இத‌ற்கான‌ ப‌தில் "நான் இன்றுவ‌ரை வேலையில் தொட‌ர்கிறேன்" என்பதுதான்.

நாளை என்பது எனக்கு மட்டுமல்ல, இங்கு வேலை செய்யும் வெளி நாட்டவர் அனைவருக்கும் "கேள்விக்குறி"தான்.

துபையில் மழைக்காலம்

துபையில் மழைக்காலம்

இது எனது முதல் பதிவு எனக்கும் வலை பதிவுலகிற்குமான உறவு ஆறு மாதங்கள், வேலைப்பளுவின் காரணமாக உடனே வலைப்பதிவு ஒன்றை தொடங்க இயலவில்லை. அப்படின்னா இப்போ வேலை வெட்டியில்லையான்னு நீங்க கேட்கலாம், அது பற்றி அடுத்த வரவிருக்கும் பதிவுலகளில் உங்களுக்கு தெரிய வரும்.
அமிரகம் மற்றும் துபையின் அன்றாட நிகழ்வுகளை வலைபதிவின் ஊடாக தமிழ் கூறும் நல்வுலக்கு வழங்க வேண்டும் என்பதற்கானக்கான சிறுமுயற்சிதான் இந்த வலைப் பூ(பதி)
இப்போது அமிரகத்தில் மழைக்காலம் முடிந்து பனிப்பொலிவுடன் குளிர் ஆரம்பித்து விட்டது.என்னது துபையில் மழையான்னு ஆச்சரியப்படாதீங்க, இந்த வருடம் கடந்த 4 வாரத்தில் அப்பப்ப நல்ல மழை பெய்தது, சென்ற வருடம் 4 நாட்கள் துபை ஷார்ஷா அமிரகங்கள் பெரு மழையால் வெள்ளக்காடனது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயழ்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானதுகடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளிர் அதிமாகியுள்ளது. பகலிலும் நடுங்கும் குளிர், பிப்ரவரி வரை இந்த கால நிலை தொடரும்