script src='http://bloganolutilities.googlepages.com/blogger_comment_photos.js' type='text/javascript'/> ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க‌: துபையில் மழைக்காலம்

துபையில் மழைக்காலம்

துபையில் மழைக்காலம்

இது எனது முதல் பதிவு எனக்கும் வலை பதிவுலகிற்குமான உறவு ஆறு மாதங்கள், வேலைப்பளுவின் காரணமாக உடனே வலைப்பதிவு ஒன்றை தொடங்க இயலவில்லை. அப்படின்னா இப்போ வேலை வெட்டியில்லையான்னு நீங்க கேட்கலாம், அது பற்றி அடுத்த வரவிருக்கும் பதிவுலகளில் உங்களுக்கு தெரிய வரும்.
அமிரகம் மற்றும் துபையின் அன்றாட நிகழ்வுகளை வலைபதிவின் ஊடாக தமிழ் கூறும் நல்வுலக்கு வழங்க வேண்டும் என்பதற்கானக்கான சிறுமுயற்சிதான் இந்த வலைப் பூ(பதி)
இப்போது அமிரகத்தில் மழைக்காலம் முடிந்து பனிப்பொலிவுடன் குளிர் ஆரம்பித்து விட்டது.என்னது துபையில் மழையான்னு ஆச்சரியப்படாதீங்க, இந்த வருடம் கடந்த 4 வாரத்தில் அப்பப்ப நல்ல மழை பெய்தது, சென்ற வருடம் 4 நாட்கள் துபை ஷார்ஷா அமிரகங்கள் பெரு மழையால் வெள்ளக்காடனது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயழ்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானதுகடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளிர் அதிமாகியுள்ளது. பகலிலும் நடுங்கும் குளிர், பிப்ரவரி வரை இந்த கால நிலை தொடரும்

5 மறு மொழிகள்:

Unknown சொன்னது…

டைட்டில் ரொம்ப நல்லா இருக்கு
பார்த்திபனிடம் சொல்ல வேன்டாம்
படம் எடுத்துருவாரு

ananthi subra .doha

boopathy perumal சொன்னது…

அன்புடையீர்,
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நீங்களும் இதுபோல் ஒரு வலைப்பூ
தொட‌ங்கி கத்தாரில் நீங்கள் காணும்(மேய்க்கின்ற) ஒட்டகங்களை பற்றி தமிழ் கூறும் ந‌ல் உல‌கிற்கு எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறன். இனிவரும் பதிவுகளைப்படித்து விட்டு தவறாமல் தங்களின் மேலான‌ கருத்துக்களை பின்னூட்டவும்

வடுவூர் குமார் சொன்னது…

அனுபவித்துக் கொண்டிருக்கேன்.

M.Rishan Shareef சொன்னது…

நீங்கள் கொடுத்துவைத்தவர்..கத்தாரில் கடந்த வருடத்தில் ஒரே ஒரு நாள்தான் மழை.. இப்பொழுது குளிர்காலமும் போய்விட்டது. ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்..இம்முறை ஏமாற்றி விட்டது :(

boopathy perumal சொன்னது…

"நீங்கள் கொடுத்துவைத்தவர்..கத்தாரில் கடந்த வருடத்தில் ஒரே ஒரு நாள்தான் மழை.. இப்பொழுது குளிர்காலமும் போய்விட்டது. ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்..இம்முறை ஏமாற்றி விட்டது"

வருகைக்கும் & மறுமொழிக்கும் நன்றி நண்பரேச்

கருத்துரையிடுக